மீண்டும் உச்சத்தில் ஏறும் ஐ.டி. துறை!

விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்ற இந்தியாவின் ஐ.டி. முதலைகள்தான் அயல்நாடுகளில் கிளைகள் தொடங்கவேண்டுமா… எங்களாலும் முடியுமே என்று சிறிய ஐ.டி. நிறுவனங்களும் கச்சைக்கட்டிக்கொண்டு களமிறங்கிவிட்டதால், இந்திய ஐ.டி. துறை மீண்டும் கிடு கிடு வளர்ச்சியை எட்டிபிடித்துக்கொண்டிருக்கிறது.

ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையில் மீண்டும் புத்துயிர் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து புதிய ‘புராஜக்ட்’களை எடுத்து செய்வதற்கான வாய்ப்புகள் நடுத்தர மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கு வந்து குவியத் தொடங்கியுள்ளதாக இத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்கள் மகா பெரிய ‘புராஜக்ட்’களை எடுத்து செய்வதற்கே அதிக முன்னுரிமை அளிப்பதால், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ‘புராஜக்ட்’கள் மேற்கூறிய நடுத்தர ஐ.டி. நிறுவனங்களை தேடி வரத் தொடங்கிவிட்டன.

இதனால் நடுத்தர இந்திய ஐ.டி. நிறுவனங்கள் கூட, வெளிநாடுகளில் தைரியமாக கடைவிரிக்க தொடங்கிவிட்டன.இதற்கு தோதாக வெளிநாடுகளிலேயே அந்நிறுவனங்களுக்கு ஏற்ற செலவில் பணியாளர்களும் கிடைக்கத் தொடங்கிவிட்டதும் அதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

இதனால் நடுத்தர ஐ.டி. நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் இலாபம் போன்றவை நிச்சயம் 2009 ஆம் ஆண்டைவிட நடப்பு காலண்டர் ஆண்டான 2010 ல் முன்னேற்றமாகவே காணப்படும்.அதேப்போன்று வருகிற 2011 ஆம் ஆண்டு, 2010 ல் காணப்பட்டதைவிட இன்னமும் சிறப்பாக இருக்கும்” என்று கூறுகிறார் இத்துறை நிபுணரான ஹிதேஷ் ஷா!

ஜியோமெட்ரிக் போன்ற ஏராளமான நடுத்தர ஐ.டி. நிறுவனங்கள் ஏற்கனவே அயல்நாடுகளில் கிளைகளை திறந்து செயல்பட தொடங்கிவிட்ட நிலையில், பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ், மெபாசிஸ் போன்ற நிறுவனங்கள் அயல்நாடுகளில் கால் பதிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வருகின்றன.

இதனை அந்த நிறுவனங்கள் தடம் பதிக்க விரும்பும் நாடுகளில் ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் சிறிய ஐ.டி. நிறுவனங்களை கையகப்படுத்துவது மூலமாகவோ அல்லது புதிதாக தொடங்குவதன் மூலமாகவே நிறைவேற்ற நினைக்கின்றன.

பொருளாதார சரிவுதான் பல வெளிநாட்டு நிறுவனங்களை தங்களது பணிகளை குறைந்த செலவாகும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு அளித்து “அவுட்சோர்சிங்” செய்யும் நிலைக்கு தள்ளியது .

இந்நிலையில் ஜியோமெட்ரிக்கை போன்றே, “ஜென்ஸார் டெக்னாலஜிஸ் லிமிடெட்” நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த பிஎஸ்ஐ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான “அகிபியா” என்ற நிறுவனத்தை சமீபத்தில் கையகப்படுத்தியுள்ளது.

அயல்நாட்டில் தனது தடத்தை அதிகரித்துக்கொள்ளும் நோக்கத்திலேயே “ஜென்ஸார்” இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.அதேப்போன்று மாஸ்டெக் லிமிடெட் நிறுவனமும் எஸ்இஜி என்ற அமெரிக்க நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

இவை தவிர மேலும் பல நடுத்தர நிறுவனங்களும் பல வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தவோ அல்லது புதிதாக தொடங்கவோ வரிசை கட்டி நிற்கின்றன.

நாடு மழுவதிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தாண்டு செப்டம்மாதம் வரையில் 13 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் ஐ.டிமற்றும் பி.பி.ஓ., துறைமுதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக ஜவுளித்துறையும் இடம்பெறுகின்றன. நாடு முழுவதிலும் ஐ.டிதுறையில் 8.54 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதனால் ஐ.டி. துறை மீண்டும் உச்சாணியில் ஏறத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது!

மேலும் இதுபோன்ற சிந்தனைக்கு விருந்தாகவும் , சுவையான ,சூடான கட்டுரைகளுக்கு ARTICLES LINKS tab – யை Click செய்யவும் …..
(wd)

Advertisements

4 thoughts on “மீண்டும் உச்சத்தில் ஏறும் ஐ.டி. துறை!”

 1. மிகவும் பயனுள்ள பதிவு…

  அருமையான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்..!

  எனது வலைப்பூவிலும் பதிவு ஏற்றிவிட்டேன்.

  1. தங்கள் வருகைக்கும் , மறுமொழிக்கும் எனது நன்றிகள் ….

   எனது பதிவினை உங்களது வலைப்பூவில் ஏற்றியதர்க்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .

 2. மிகவும் பயனுள்ள பதிவு…

  அருமையான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்..!

  எனது வலைப்பூவிலும் பதிவு ஏற்றிவிட்டேன்.

  1. தங்கள் வருகைக்கும் , மறுமொழிக்கும் எனது நன்றிகள் …. எனது பதிவினை உங்களது வலைப்பூவில் ஏற்றியதர்க்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s