60 ஆண்டுகாலமாக குடிப்பழக்கத்தை மறந்த ஒரு கிராமம்!

தமிழகத்திலுள்ள கிராமம் ஒன்று கடந்த 60 ஆண்டுகாலமாக முழு மதுவிலக்கை கடைப்பிடித்து வருகிறது என்றால், அதை நம்பமுடிகிறதா?

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த காவிரி டெல்டா பகுதியிலுள்ள அந்த கிராமம்தான், ‘காசங்காடு’.

அந்த கிராமத்துக்குள் கடந்த 60 ஆண்டுகளாக எந்த நபரும் மது அருந்துவதில்லை; புகைப் பிடிப்பதில்லை. அவ்வாறான செய்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிராமத்துப் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து 60 ஆண்டுகளுக்கு முன்பு விதித்த தடையை, இப்போதும் கூட எவரும் மீறுவதில்லை.

கடந்த 1949-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு தீ விபத்து சம்பவமே, காசங்காட்டில் கட்டுப்பாடு ஏற்பட காரணமாக அமைந்தது.

அணைக்கப்படாத ஒரு பீடித் துண்டினை ஒருவர் தூக்கிப் போட்டதில், வீடுகளின் கூரைகள் எரிந்து சாம்பலாயின. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதுமில்லை.

என்றாலும் கூட, இனி நம் ஊரில் எவரும் புகைப்பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என்று கிராமத்தினர் முடிவு செய்தனர். அது, இப்போது வரை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

புகை மற்றும் மது பழக்கம் உள்ள காசங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ஊருக்கு வெளியே மட்டும் அத்தகைய செயலைச் செய்துவிட்டு, போதை தெளிந்த பிறகே ஊருக்கு வர வேண்டும் என்பது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய, எழுதப்படாத உத்தரவு.

அதை எவருமே மீறுவது இல்லை. அத்துடன் எங்கள் ஊரில் 98 சதவிகிதம் பேருக்கு குடி மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கமே கிடையாது என்கின்றனர், காசங்காடு கிராமத்தினர்!

(wd)

3 thoughts on “60 ஆண்டுகாலமாக குடிப்பழக்கத்தை மறந்த ஒரு கிராமம்!”

  1. a very happy news! to learn from this people if all other Indian villages are follow the same thing the India become a without alcoholic country
    that villagers may proud for these habit and rules

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s