site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

 • Tamil

 • Movies Blog

  Visit http://www.freetamildubbedmovies.com for free Tamil Dubbed Movies download .

 • Click here for Free Dubbed Movies Download

 • மேலும் சுவையான செய்திகளை தமிழில் வாசிக்க…

 • Tutorials

 • Visitors from Countries

  free counters
 • Blog Stats

  • 285,540 hits
 • Advertisements

2ஜி: ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!

Posted by sambala87(சூரியன்) on December 5, 2010

2ஜி அலைக்கற்றை ஏலத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்காக தி மு க வின் மத்திய தகவல் தொழிற்நுட்ப தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜா பதவிவிலகிவிட்டாலும் இந்தப் பதவி விலகலுக்குப் பின்னிருக்கும் செய்திகள் சுவாரசியமானவை.

இந்தப் பதவி விலகலுக்கு ஊடக அழுத்தங்களும் ஒரு காரணமாக அமைந்தன எனில் மிகையாகாது. ஏறத்தாழ ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கோடிக்கும் மேல் அரசுக்கு நட்டமேற்படுத்திய குற்ற உணர்வாலோ, கொள்கைப் பிடிப்பாலோ அமைச்சர் பதவி விலகிவிடவில்லை என்பது ஒருபுறமிருக்க, மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கர்நாடக முன்னாள் முதல்வருமான வீரப்பமொய்லி சொல்லியிருக்கும் கருத்தும் இதில் கவனிக்கத்தக்கது:

இதே போன்று கணக்கு தணிக்கைத் துறை முன்னாள் அமைச்சரான பிரமோத் மஹாஜன் மீதும் குற்றம் சுமத்தியிருந்தது. அவரை யாரும் பதவி விலகக் கோரவில்லை” என்கிறார் வீரப்பமொய்லி. மேலும் அவர் சொன்னது, “கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கைகளுக்காக இதுவரை யாரும் பதவி விலகியதுமில்லை”

அப்படியானால் ராஜாவை மட்டும் பதவி விலகும்படி கோரிக்கைகள் அழுத்தமாக எழுந்தது ஏன்? ராஜா கழற்றிவிடப்பட்டது ஏன்? நட்டத்தொகை பெரிதாக இருந்ததுதான் காரணமா? என்றால் அது ஒரு காரணம் மட்டுமே. இந்தத் தொகையளவு முழுதுமாக கையூட்டாக மாறியிருக்கும் வாய்ப்புமில்லை.அதில் ஏதேனும் ஒரு சிறு விழுக்காடே கையூட்டப்பட்டிருக்கும் என்பது தெளிவு.

இங்குதான், ராசா பதவி விலகிய ஞாயிறு மாலையே சென்னையின் நட்சத்திர உணவகம் ஒன்றில் திமுக முக்கியப்புள்ளிகள் மகிழ்ந்து கொண்டாடி,சிறப்பித்த விருந்து ஒன்றின் பின்னணி மீது சந்தேக வர்ணம் பூசுகிறார்கள் பத்திரிக்கையாளர்கள். ராசா விலகியதால் நிகழ்த்தப்பட்ட கேளிக்கைவிருந்தா? அல்லது அது தனிவகை குடும்ப ஒன்றிப்பு விழாவா என்பதில் ஊடகத்தாரிடம் பூடகமாய் ஏதோ செய்தி இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

ராசா பதவி விலகிய அன்றே டெல்லியில் ஊடகத்தாரின் கேள்விகளை எதிர்கொண்டு தடுப்பாட்டம் ஆடினார் ராசாத்திஅம்மாளின் புதல்வியான கனிமொழி. ராசா, கனிமொழியின் தாயார் ராசாத்திஅம்மாளின் ஆதரவாலேயே பதவிபெற்றார் என்பது சிதம்பர ரகசியமில்லை. சென்னை ரகசியமே

அப்படியானால் அந்த சென்னை ஆடம்பர விருந்து?

ரிட்ஸ் ஹோட்டலில் நடந்த அந்த விருந்தை நடத்தியது இதே துறையில் திமுக சார்பில் மந்திரி பதவி வகித்த தயாநிதி மாறனும் அவரது சகோதரர் கலாநிதி மாறனும் தான். தமது பல்வேறு அலுவல்களுக்கிடையே இந்த விருந்துக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் யார் தெரியுமா? நம்புங்கள், தமிழகத்தின் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், மத்திய
அமைச்சரும், தென்மண்டல திமுக பொறுப்பாளருமான மு.க அழகிரியும்தான்
அவர்கள்.

கடந்த வாரம் முழுதும் தமிழகத்தின் மேற்குப்பகுதிகளில் பல்வேறு அரசு விழாக்களிலும், பொதுநிகழ்ச்சிகளிலும் மும்முரமாக இருந்துவந்த துணைமுதல்வர், இந்த விருந்துக்கு அழைக்கப்பட்டதும் கோவையிலிருந்து விரைந்துவந்து கலந்துகொள்கிறார். அதுபோலவே, இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பட்டும் படாமலும், வெகுசுத்தமாக இந்த அலைக்கற்றை விவகாரத்தில் ஒற்றைசொல்லும் வெளியிடாதிருக்கும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியும் இந்த விருந்தில் லந்துகொள்வதற்கென்றே மதுரையிலிருந்து விமானத்தில் விரைந்து வந்திருக்கின்றார் எனில் அந்தக் கொண்டாட்டத்தினை என்னவென்று சொல்வது? நாடாளுமன்ற அரசியலில் மும்முரம் காட்டாததற்கும், அலைக்கற்றை விவகாரத்தில் தனிவரிசையில் ஒதுங்கி இருந்ததற்கும், 18ம்தேதி வைத்திருந்த தன் மகன் கல்யாணத்தை காரணம் கூறும் அழகிரி இந்த விருந்துக்கு மட்டும் ஓடோடி வந்திருக்கிறார் என்பதை உன்னித்துப்பார்க்கிறார்கள் ஊடகத்தார்கள்.

இதே மாறன் சகோதரர்களுடன் அழகிரிக்கு ஏற்பட்ட பிணக்கு தான் கருணாநிதியின் முதல் குடும்பத்தில் ஆழமான வடுக்களை முன்பு உண்டாக்கியது. அந்த வடுக்கள் ஆறிவரும் நேரமாக, அதன்மீதான மற்றுமொரு களிம்பாக இந்த கொண்டாட்டங்கள் அமைந்தனவென்றும், அதே நேரம் தமிழ்நாட்டின் முதல்வர் குடும்பங்களில் இருக்கும் பிளவை வெளிப்படுத்துவதாகவும் இவை அமைகின்றனவென்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

(inn)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: