site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

விக்கி லீக்ஸ் : சவுதி கவலைப்படவில்லை

Posted by sambala87(சூரியன்) on December 5, 2010

“விக்கி லீக்ஸ்’ விவகாரத்தில், வெளியான தகவல் குறித்து தங்களுக்கு கவலையில்லை என்று, சவுதி அரேபியா மற்றும் பக்ரைன் நாடுகள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் “விக்கி லீக்ஸ்’ வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் மூலம், சவுதி அரேபிய மன்னர் உள்ளிட்ட சிலர், ஈரான் மீது போர் தொடுக்கும்படி அமெரிக்காவை வற்புறுத்தியது தெரிந்தது.

இதுகுறித்து நேற்று முன்தினம், சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒசாமா அல் நக்லி கூறுகையில்,”இந்த ஆவணங்கள் வெளிவந்தது, அவற்றின் நம்பகத் தன்மை ஆகியவை குறித்து, சவுதி அரேபியாவுக்கு எவ்வித கவலையும் கிடையாது. அரசின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடு தெளிவாகவே உள்ளது. இவற்றோடு அரசுக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதால், இதுகுறித்து அரசு விளக்கமளிக்கத் தேவையில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

பக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஷேக் காலித் பின் அகமது பின் முகமது கூறுகையில்,”அமைதியான நடவடிக்கைகளுக்காக அணு சக்தியை அனைத்து நாடுகளும் பயன்படுத்துவதை பக்ரைன் ஆதரிக்கிறது. அமெரிக்க அதிகாரிகளின் சொந்த ஆய்வுகளைத் தான் இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன’ என்று கூறியுள்ளார்.

வளைகுடா கூட்டுறவு கவுன்சில் பொதுச் செயலர் அல் அட்டியா கூறுகையில்,”அரபு நாடுகள் ஈரானைத் தாண்டி இஸ்ரேல் பற்றியும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இஸ்ரேல் அரபு நாடுகளின் முக்கிய எதிரி’ என்று கூறியுள்ளார்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: