விக்கிலீக்ஸ்:”போர்குற்றங்களுக்கு ராஜபக்சேதான் பொறுப்பு”

இலங்கைப் போரின் இறுதியில் நடைபெற்ற படுகொலைகளுக்கு அதிபர் ராஜபக்சேதான் பெருமளவில் பொறுப்பு என்று அமெரிக்க ராஜதந்திரிகள் கருதியதாக தற்போது விக்கி லீக்ஸ் இணைய தளத்தில் கசியவிடப்பட்டுள்ள ஆவணங்கள் காட்டுகின்றன.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் – அமெரிக்க அரசுத் துறைக்கு அளித்த ரகசிய தகவல்களை தற்போது விக்கி லீக் வெளியிட்டு வருகிறது.

இதில் இலங்கை குறித்த ஆவணங்கள் இன்று வெளியாகியுள்ளன. இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இரு தரப்பு உறவுகளில் இலங்கை இராணுவத்தாலும், அதிகாரிகளாலும் இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு பொறுப்பேற்றல் குறித்த விடயம் தொடர்ந்து நெருடலான விடயமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசுத் துறை காங்கிரஸ் அவைக்கு அளித்த அறிக்கையும் – மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக பேராசிரியர்கள் அமைப்பின் அறிக்கையும் விடுதலைப் புலிகள் மீதும் மனித உரிமை மீறல் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆவணப்படுத்தியிருந்தும் விடுதலைப் புலி இயக்கத் தலைவர்கள் பலர் போரின் இறுதியில் கொல்லப்பட்டு விட்டதால் இதற்கான பொறுப்பை ஏற்க வெகு சிலரே உள்ளனர் என்கிறது அமெரிக்க ஆவணம்.

ஒரு நாட்டின் அரசாங்கம் தனது இராணுவத்தினர் மீதும், மூத்த அதிகாரிகள் மீதும் போர் குற்றம் இழைத்து தொடர்பான விசாரணையை நடத்தியதாக சரித்திரத்தில் இது வரை எவ்வித சம்பவமும் காணப்படவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இலங்கையில் போர் குற்றங்களுக்கான பொறுப்பு நாட்டின் மூத்த சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளைச் சார்ந்ததாக இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் தனது தந்தியில் தெரிவித்ததாக விக்கி லீக் ஆவணம் கூறுகிறது.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் பேட்ரிகா புடேனிஸ் இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி அனுப்பிய தந்தியில், போர் குற்றஹ்களுக்கு, அதிபர் மகிந்த ராஜபக்சவும்- போரின் போது இராணுவத்தின் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும் காரணம் என்று கூறியுள்ளார்.

அதே நேரம் போர் குற்ற விசாரணைகள் பற்றி புலம் பெயர் தமிழர்கள் காட்டும் அளவுக்கு இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் இந்தப் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பும் தமிழ் தலைவர்கள் அதனால் அதை தொடர்ந்து இப் பிரச்சனையை வைத்திருக்க தமிழ் தலைவர்கள் விரும்புவார்கள் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்கத் தூதர் புடேன்ஸ், கொழும்பிலும், யாழ்பாணத்திலும் பிற இடங்களிலும் தாம் பேசிய தமிழ் தலைவர்கள் போர் குற்ற விசராணை பற்றி பேச இது சரியான தருணம் அல்ல என்று தெரிவித்ததாக தெரிவித்துள்ளார். இது பற்றி அதிகம் அழுத்தம் கொடுத்தால் அதனால் தாம் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தை அவர்கள் வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த மாதம் சுயாதீன போர் விசாரணைகளுக்கு தான் ஆதரவு அளிப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியிருந்தார். ஆனால் இது போன்ற பகிரங்க வெளிநாட்டு அழுத்தங்கள் எதிர்மாறான பலனைத் தரும் என்று அமெரிக்க தூதர் முன்பு கருத்து வெளியிட்டிருந்தார்.

இலங்கை அரசுக்கு போரில் வெற்றியை ஈட்டித் தந்த போர் வீரர்களுக்கு எதிரான ஒரு சர்வதேச சதியே போர் குற்ற விசாரணை கோரிக்கை என்று அதிபர் ராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் பிரசாரம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் என அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார்.

(bbc)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s