விக்கிலீக்ஸில் வெளியான புதிய தகவல்கள்!

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது தாக்குதல் நடத்துவதற்கு பாலஸ்தீன அரசின் தலைவர் மெஹம்மது அப்பாஸ், எகிப்து அரசு ஆகியவற்றின் ஒப்புதலை பெற்றதையும், காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் போராளிக் குழுவை ஒழித்துக்கட்டியப் பிறகு அப்பகுதியை பாலஸ்தீன அரசின் கட்டுப்பாட்டிற்கு விட்டுவிடுவதாக இஸ்ரேல் அரசு ‘டீல்’ பேசிய அபார விவரங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

ஒரு பக்கத்தில் ஈரான் உருவாக்கி வைத்திருக்கும் அணு ஆயுத தொழில் நுட்பம் மிகச் சாதாரணமானது என்கிற விவரத்தை அமெரிக்க அரசு அறிந்திருப்பதையும், அப்படிப்பட்ட நிலையிலும், ஈராக்கின் அணு மையங்களின் மீது தாக்குதல் நடத்துமாறு செளதி அரேபியா அமெரிக்காவை வற்புறுத்தியதையும் வெளியிட்டு அசத்தியுள்ளது விக்கிலீக்ஸ்.

பாகிஸ்தான் அதன் பாதுகாப்புத் தேவைக்கும் அதிகமான எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை உருவாக்கி வருகிறது என்பதையும், அணு ஆயுதங்களை தயாரிக்க அது உருவாக்கும் யுரேனிய வெடிப் பொருள் அங்குள்ள இஸ்லாமிய தீவிரவாத (பயங்கரவாதிகள் என்ற சொல்லை இங்கு பயன்படுத்தவில்லை என்பதை கவனிக்க வேண்டும்) குழுக்களின் கைகளுக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளதாகவும், அதைக் கைப்பற்ற அமெரிக்கா மேற்கொண்ட இரகசிய முயற்சி தோற்றதையும் வெளியிட்டு, அமெரிக்காவின் கையாலாகாத்தனத்தை புரிந்துகொள்ள உதவியுள்ளது விக்கிலீக்ஸ்.

பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணை தயாரிப்புத் திட்டத்தில் 1,20,000 முதல் 1,30,000 பேர் வரை பணியாற்றி வருவதாகவும், அவர்கள் அனைவரும் தங்கள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே பணியாற்றுபவர்கள் என்று 100 விழுக்காடு உறுதியளிக்க முடியாது என்ற விவரத்தை ரஷ்யாவின் அயலுறவு அமைச்சகத்தின் யூரி கோரோலீவ் கூறியதை வெளிக்கொணர்ந்துள்ளது விக்கிலீக்ஸ். இதற்காக இந்தியா பாராட்ட வேண்டாமா?

ஏமன் நாட்டில் அல் கய்டா அமைப்பிற்கு எதிராக அந்நாட்டுப் படைகள் நடத்திய தாக்குதல் என்று அந்நாட்டு அதிபர் அலி அப்துல்லா சலே கூறியது பொய் என்பதையும், அது அமெரிக்கப் படைகள் நேரடியாக நடத்திய தாக்குதலே என்பதையும் (ஆனால் போட்ட குண்டுகள் நம்முடையது என்றார் அலி அப்துல்லா) விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.

பயங்கரவாதம் அல்ல அணு ஆயுத குவிப்பே உலகிற்கு முதன்மையான பெரும் அச்சுறுத்தல் என்று அமெரிக்க, இங்கிலாந்து இராஜதந்திரிகள் அச்சம் தெரிவித்து அனுப்பிய தகவல்களை உலகின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது விக்கிலீக்ஸ்.

(wd)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s