லஞ்ச ஊழலைப் பொறுத்தவரையில், தனது உதவியாளர்கள் கூறுவது போல் தான் ஒரு நெருப்பு என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோபாலபுரம் வீட்டைத்தவிர எந்த ஒரு பெரிய வீடோ, தோட்டமோ அல்லது எஸ்டேட்டோ நான் வாங்கவில்லை. அரசு நிலத்தை ஆக்கிரமித்ததில்லை. அரசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியதுமில்லை. இந்நிலையில், என்னை ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் என சிலர் கூறி வருகின்றனர்.
எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள் தங்களுக்கென நிலங்களையோ வீடுகளையோ வாங்கியிருக்கலாம். ஆனால் அவற்றிற்கு நான் எந்தவித நிதியுதவியும் செய்யவில்லை. தமிழ் திரைப்படங்களில் திரைக்கதை எழுத அந்த காலத்திலேயே அதிகளவில் சம்பளம் வாங்கியவன் நான். தி.மு.க., வின் எந்த பதவியிலும், பொறுப்பிலும் இல்லாத போதே கோபாலபுரம் வீட்டை நான் வாங்கினேன். தற்போது என் வங்கிக்கணக்கில், வைப்பு தொகையாக ரூ. 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134ம்ல சேமிப்பு தொகையாக ரூ. 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ம் மட்டுமே உள்ளது. எனக்கிருந்த வீட்டைக்கூட மருத்துவமனைக்காக தானமாக கொடுத்து விட்டேன். லஞ்ச ஊழலைப் பொறுத்த வரையில், எனது உதவியாளர்கள் கூறுவது போல் நான் ஒரு நெருப்பு” என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
(dm)