பிரான்ஸ் ஆதரவு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம்பெற பிரான்ஸ் முழு ஆதரவு தெரிவிப்பதாக அந்நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோஸி தெரிவித்தார்.

ஆக்ரா புறப்பட்டு செல்வதற்கு முன்பாக, செய்தியாளர்களிடம் பேசிய சர்கோஸி கூறியதாவது: பிரான்ஸ் மற்றும் இந்தியா இரு நாடுகளும் சிறந்த நட்பு நாடுகளாக உள்ளன. மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவின் மீது நடந்த தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். எனவே, எல்லா ஜனநாயக நாடுகளும் இந்தியாவின் பக்கம் இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தொடுக்கப்படும் தீவிரவாத தாக்குதல்கள், உலகின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தி வருகின்றன. தாலிபான்களுக்கு எதிரான போரிலிருந்து

பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. தாலிபான்கள் மீண்டும் தலையெடுக்க விடக்கூடாது. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு சண்டை அதன் உச்சத்தை அடைந்தால், அதனால் யாருக்கும் பலனேதுமில்லை. இதில் வென்றே தீர வேண்டும்.

பிரேசில், ஜெர்மனி, ஜப்பான், சில ஆப்பிரிக்க மற்றும் அரேபிய நாடுகளுடன் இந்தியாவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற வேண்டும். இதற்கு பிரான்ஸ் ஆதரவளிக்கும்.

நாட்டின் வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றின்மூலம் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மன்மோகன் சிங் ஆர்வமாக இருக்கிறார். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் சிங்கின் கருத்து சரியானதாக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி மகத்தானது. உலக அளவில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். உலகின் பிரபல நாணயங்களின் வரிசையில் இந்தியாவின் நாணயமும் இடம்பெறும் என்ற நம்பிக்கையுள்ளது.

இந்தியாவின் நட்பு நாடாக பிரான்ஸ் உள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் அணு மின்சாரம் தயாரிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு பிரான்ஸ் ஆதரவு அளிக்கும். இந்தியாவின் அணு மின்சாரத் திட்டங்களை பிரான்ஸ் ஆதரிக்கும் என்றார்.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s