ரூ. 1.76 லட்சம் கோடி என்பது யூகம் : ராஜா வக்கீல்

“”2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று மற்றும் யூகத்தின் அடிப்படையிலானது,” என, சுப்ரீம் கோர்ட்டில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் கங்குலி மற்றும் சிங்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நடந்து வருகிறது.

விசாரணையின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தரப்பில் ஆஜரான சீனியர் வக்கீல் அந்தியார்ஜுனா கூறியதாவது: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, உத்தேசத்தின் அடிப்படையிலானது. மிகைப்படுத்தப்பட்ட ஒன்று.

முற்றிலும் யூகத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. “ஸ்பெக்ட்ரம் லைசென்சின் உண்மையான மதிப்பை மதிப்பீடு செய்ய தொலைத்தொடர்புத் துறை தவறி விட்டது’ என, ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது எண்ணங்கள் அடிப்படையிலானது.

அதை நீதிமன்ற பரிசீலனைக்கு உட்படுத்த முடியாது. ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை முற்றிலும் தவறானது. இந்த அறிக்கை தற்போது பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்பட்டு, பொது கணக்குக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தணிக்கைக்கு ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் பின்பற்றிய கோட்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எண்ணங்கள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்து யாரையும் கட்டுப்படுத்தாது.

ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம், 2003 மற்றும் 2008ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஆய்வு செய்துள்ளது. ஆனால், தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சராக 2007ம் ஆண்டு மே 16ம் தேதி தான் ராஜா பொறுப்பேற்றுள்ளார். ராஜாவுக்கு முன்னர் இந்தத் துறையின் அமைச்சராகப் பதவி வகித்த அருண்÷ஷாரி உட்பட இருவர், ஏற்கனவே 52 லைசென்சுகளை வழங்கியுள்ளனர். டிராய் பரிந்துரையின் அடிப்படையிலேயே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் தொலைத்தொடர்புத்துறை செயல்பட்டுள்ளது.

இருந்தும் அதை ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் கண்டு கொள்ளவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடிக்கு ராஜாவே காரணம் எனக் கூறியுள்ளது. இவ்வாறு அந்தியார்ஜுனா கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “”உயரிய தணிக்கை அமைப்பான ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம், அரசு சொல்வதை எல்லாம் சரியென ஒப்புக் கொள்ள தேவையில்லை. ஆடிட்டிங் என்பது ஒழுங்கு நடவடிக்கை அல்ல. சில விஷயங்களில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அந்த அமைப்புக்கு உள்ளது,” என்றனர்.

இதன்பின் வாதிட்ட அந்தியார்ஜுனா கூறியதாவது: இந்த விவகாரத்தில் ராஜா அமைதியாக இருந்ததால், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டதாக கருதக்கூடாது. இப்பிரச்னை நீதிமன்ற விசாரணையில் உள்ளதால், ஒரே ஒரு பத்திரிகையிடம் தான் ராஜா பேச விரும்பினார். ஆனால், மீடியாக்கள் அவரை குற்றவாளியாக சித்தரித்து விட்டன.

ராஜாவை மீடியாக்கள் குற்றவாளியாக சித்தரித்ததற்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். ஆட்சேபம் தெரிவிக்கிறேன். ராஜா தான் இழப்பிற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டின. இதுவெல்லாம் சரியில்லாதது. அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றுதல், அரசியல் கட்டாய சூழ்நிலை மற்றும் கட்சித் தலைமையின் விருப்பத்திற்கு கட்டுப்படுதல் போன்ற காரணங்களுக்காக, நவம்பர் 14ம் தேதி ராஜா தன் பதவியை ராஜினாமா செய்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி பிரச்னை தொடர்பாக, கடந்த 14 நாட்களாக பார்லிமென்ட் நடக்கவில்லை. நாட்டின் பார்லிமென்ட் வரலாற்றில் இதுபோல் நடந்ததில்லை.

ஒரு விவகாரம் நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும் போது, அதுபற்றி மீடியாக்கள் பெரிய அளவில் செய்தி வெளியிடுவது எந்த நாட்டிலும் நடக்காத ஒன்று. ஆனால், இங்கு ஒவ்வொரு நாளும் ராஜாவை குற்றவாளியாக சித்தரித்து செய்திகள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறு அந்தியார்ஜுனா கூறினார்.

ராஜா மீறினார்: அதேநேரத்தில், மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், “”ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைமுறைகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியும் சில ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தனர். அதை, அமைச்சராக இருந்த ராஜா கவனத்தில் கொள்ளவில்லை. பிரதமரின் தயக்கம் மற்றும் அவரின் கருத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தொலைத் தொடர்புத் துறை மிகவும் வெளிப்படையான தன்மையுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும்,” என்றார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s