site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

    Advertisements
  • Tamil

  • Movies Blog

    Visit http://www.freetamildubbedmovies.com for free Tamil Dubbed Movies download .

  • Click here for Free Dubbed Movies Download

  • மேலும் சுவையான செய்திகளை தமிழில் வாசிக்க…

  • Tutorials

  • Visitors from Countries

    free counters
  • Blog Stats

    • 283,487 hits

ராஜா விவகாரத்தில் உண்மையில் நடந்தது இது தான்!

Posted by sambala87(சூரியன்) on December 4, 2010

“ராஜினாமா செய்யவே மாட்டேன்’ என்று, சொல்லிக் கொண்டிருந்த ராஜா, திடீரென பிரதமரைச் சந்தித்து, ராஜினாமா செய்தது ஏன்? நடந்தது இது தான்.

ஞாயிறன்று மதியம், கருணாநிதிக்கு பிரணாப் முகர்ஜி போன் செய்தார். “நிலைமை மோசமாகிவிட்டது. ராஜா பதவி விலகவில்லை என்றால், எதிர்க்கட்சிகள் பார்லிமென்டை முடக்கிவிடுவர். தயவு செய்து ராஜாவை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்’ என்று, தி.மு.க., தலைவரிடம் சொன்னார் பிரணாப். விஷயத்தைக் கேட்டதுமே அதிச்சியடைந்த முதல்வர், “மறுபடியும் உங்களுக்குப் போன் செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டார்.

இதற்கிடையே, மாலை விமானத்தில் டில்லி கிளம்பினார் ராஜா. தி.மு.க., தலைவரிடமிருந்து விடைபெறும் போது, “நீ டில்லி போ… நான் சொல்கிறேன்’ என்று சொல்லிவிட்டார் கருணாநிதி. டில்லி விமான நிலையத்தில் மீடியாவிடம், “நான் பதவி விலக மாட்டேன்’ என்று பேட்டி கொடுத்துவிட்டு, காரில் ஏறியதுமே, தலைவரிடமிருந்து போன். “பிரதமரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விடு’ என்று சொன்னார் தலைவர். வீட்டிற்கு வந்த ராஜா, தன் ராஜினாமா கடிதத்தை டைப் செய்து எடுத்துக் கொண்டு, இரவு 10.30 மணிக்கு பிரதமர் வீட்டிற்குச் சென்றார்.

கடிதத்தைக் கொடுத்துவிட்டு, 20 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார் ராஜா. “காங்கிரஸ் அமைச்சர்களுக்கே இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் புரியவில்லை. பார்லிமென்டில் விவாதம் வைத்தால், பா.ஜ.,வை உண்டு, இல்லை என்று ஆக்கி விடுவேன்’ என்று சொன்ன ராஜா, “கபில்சிபல் நல்ல வக்கீல், அவர் தான் என் இலாகாவிற்கு சரியான அமைச்சர்’ என்று பிரதமரிடம் சொல்லிவிட்டு வந்தார்.

லோக்சபாவுக்கு இடைத்தேர்தல்? பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் எந்த நேரத்தில் தொடங்கியதோ தெரியவில்லை. ஆரம்பித்த நாளிலிருந்தே பிரச்னை தான். கூச்சல், குழப்பம், ஒத்திவைப்பு என்று எந்த வேலையுமே நடைபெறவில்லை.

காமன்வெல்த் விளையாட்டு, ஸ்பெக்ட்ரம் ஆகிய ஊழல்களை விசாரிக்க பார்லிமென்ட் குழு அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. முதலில் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான், பிறகு கல்மாடி என்று எதிர்க்கட்சிகள் கேட்டது போல, அவர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். பிறகு நம்ம ஊர் ராஜாவும் போய் சேர்ந்தார். இப்போது பார்லிமென்ட் குழு என்று கோஷம். இப்படியே எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தால், ஆட்சி நடந்தது போல தான் என்று காங்கிரஸ் நினைக்கிறது.

பிரதமரும், பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சித் தலைவர்களிடம், “எதற்கு பிரச்னை பேசாமல் இடைத்தேர்தலுக்கு சென்றுவிடலாம்’ என்று சொன்னார்கள். இதெல்லாம் பயமுறுத்தும் விவகாரம், தேர்தலுக்குப் போனால், காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: