site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

 • Tamil

 • Movies Blog

  Visit http://www.freetamildubbedmovies.com for free Tamil Dubbed Movies download .

 • Click here for Free Dubbed Movies Download

 • மேலும் சுவையான செய்திகளை தமிழில் வாசிக்க…

 • Tutorials

 • Visitors from Countries

  free counters
 • Blog Stats

  • 285,540 hits
 • Advertisements

“விக்கிலீக்ஸ்’: ஈரானை தாக்க சவுதி வற்புறுத்தல்!

Posted by sambala87(சூரியன்) on December 3, 2010

ஈரானை தாக்க சவுதி வற்புறுத்தல்

* அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் முனைந்துள்ள ஈரான் மீது போர் தொடுத்து, அதை அழிக்க வேண்டும் என சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா, பஹ்ரைன் மன்னர் ஹமாத், அபுதாபி மன்னர் ஷேக் முகமது ஆகியோர் தொடர்ந்து அமெரிக்காவை வற்புறுத்தியுள்ளனர். சவுதி மன்னர், “அந்தப் பாம்பின் தலையை வெட்டி விடுங்கள்’ என ஈரான் குறித்து கூறியுள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன.

* ஐ.நா.,வில் பணியாற்றும் முக்கிய உயரதிகாரிகளின் டி.என்.ஏ.,சாம்பிள், கைவிரல் ரேகைகள் பற்றிய விவரங்கள், அவர்களின் இ-மெயில்கள், “பாஸ்வேர்டு’களும் அமெரிக்காவால் சேகரிக்கப்பட்டன. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.

* சீனாவில் இயங்கிய “கூகுள்’ இணையதளச் சேவைகளில் சில இன்டெர்நெட் திருடர்கள் ஊடுருவி ஆவணங்களைத் திருடியதன் பின்னணியில் சீன அரசு இருப்பதாக அமெரிக்கா சந்தேகப்பட்டது. அமெரிக்க அரசு, தொழிலதிபர்கள் மற்றும் தலாய் லாமா ஆகியோரின் கம்ப்யூட்டர்களில் சீன அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நெட் திருடர்கள் புகுந்து தகவல்களைத் திருடியுள்ளனர்.

* வடகொரியா அழிக்கப்பட்ட பின் ஒன்றிணைந்த கொரிய தீபகற்பத்தை உருவாக்குவது குறித்து, அமெரிக்காவும் தென்கொரியாவும் ஆலோசித்துள்ளன. இதற்காக சீனாவுக்கு சில வர்த்தக சலுகைகளை தென்கொரியா ஏற்படுத்தித் தர வேண்டும் என, அமெரிக்க தூதர் தென்கொரியாவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

* இரட்டைக் கோபுர தகர்ப்புக்கு இரண்டாண்டுகள் முன்பு, பாகிஸ்தானில் இருந்த அமெரிக்க உயரதிகாரிகள், ஒசாமா பின்லாடனுக்கு எதிராகப் போர் தொடுப்பது பற்றி அமெரிக்கா தீவிரப் பிரசாரம் செய்ய வேண்டும் என விரும்பினர்.

* ஆப்கன் துணை அதிபர் கடந்தாண்டு, ஐக்கிய அரபு எமிரேட்சுக்குச் சென்ற போது அவரை 240 கோடி ரூபாயோடு, அந்நாட்டு அதிகாரிகள் பிடித்தனர். அப்போது அமெரிக்கா தலையிட்டு அவரை விடுவித்தது.

* வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு அனுப்பப்பட்ட ஏவுகணைகள் அடங்கிய கப்பலை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படி சீனாவை அமெரிக்கா வற்புறுத்தியது. அந்த ஏவுகணைகள் மூலம் ஈரான், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளைத் தாக்கக் கூடும் என அமெரிக்கா நம்பியது.

* ஏமன் அதிபர், அமெரிக்காவின் ஆசியப் படைகளுக்கான தளபதி ஜெனரல் டேவிட் பெட்ரசிடம், ஏமனில் உள்ள அல் – குவைதா பயங்கரவாதிகளைஅழிப்பது குறித்துப் பேசிவிட்டு,”வெடிகுண்டுகள் எங்களுடையவை, அமெரிக்காவினது அல்ல என்று தொடர்ந்து நாங்கள் கூறுவோம்’ என்கிறார்.

சர்ச்சை ஜூலியன்: ஊபல்வேறு அரசுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பும் இணையதளம்தான் “விக்கிலீக்ஸ்’. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரும், இணையதளங்களில் இருந்து தகவல்களைத் திருடுவதில் கைதேர்ந்தவருமான ஜூலியன் அசேஞ்ச் என்பவர்தான் இதன் நிறுவனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அட்டூழியம் குறித்த 90 ஆயிரம் ஆவணங்கள், ஈராக்கில் அமெரிக்க அட்டூழியம் குறித்த நான்கு லட்சம் ஆவணங்கள் இதுவரை இந்த இணையதளத்தால் வெளியிடப்பட்டுள்ளன. ஊஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளது. ஊஅமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட சாரா பாலின் என்பவரின் இ-மெயிலில் இருந்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

விளாடிமிர் புடினுக்கு நாயின் பெயர்

* பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆன்ட்ரூ என்பவரின் தவறான நடத்தை, மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பற்றிய விமர்சனமும் இந்த ஆவணங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

* ஐரோப்பிய தலைவர்களில் வலிமையற்றவர், முட்டாள், திறமையற்றவர் என, இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை ரோமில் உள்ள அமெரிக்க தூதர் குறிப்பிடுகிறார்.

* லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம், லிபியா அதிபர் கடாபி, தனது உக்ரேனிய நாட்டு நர்ஸ் பெண் ஒருவருடன் எப்போதும் திரிவதாகவும், மிக உயரமான கட்டடங்களில் தங்குவதற்கு அவர் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

* ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை “ஆல்பா டாக்’ என்று குறிப்பிடுகிறது. மேலும், இத்தாலி அதிபருக்கும் அவருக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைப் பற்றியும் விமர்சிக்கிறது.

* வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல், “வயதான பேர்வழி’ என்றும், ஈரான் அதிபர் அகமதி நிஜாத், “ஹிட்லர்’ என்றும் விமர்சிக்கப்படுகின்றனர்.

* தென்னாப்ரிக்காவின் வெளியுறவு அமைச்சர், ஜிம்பாப்வே அதிபருடன் ஒப்பிடப்பட்டு “பித்துப்பிடித்த வயதானவர்’ என்று கூறப்படுகிறார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: