site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

“போட்டுக்கொடுத்த’ மாணவர்களுக்கு பிரம்படி!

Posted by sambala87(சூரியன்) on December 3, 2010

தலைமை ஆசிரியர் மீதே புகார் கூறிய மாணவர்களுக்கு பிரம்படி விழுந்தது. பெற்றோர் சென்று, நியாயம் கேட்டதால், தவறை திருத்திக் கொள்வதாக தலைமை ஆசிரியர் தெரிவித்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத் தார்.

கஞ்சப்பள்ளி ஊராட்சி, ஊத்துப்பாளையம் துவக்கப்பள்ளியில் 38 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த 24ம் தேதி பள்ளிக்கு கூடுதல் உதவி துவக்க கல்வி அலுவலர் ரங்கராஜ் ஆய்வுக்கு வந்தார். அப்போது தலைமை ஆசிரியர் ஆனந்தகிருஷ்ணன் பணி நிமித்தமாக வெளியே சென்றுள்ளார். ஆய்வுக்கு வந்த ரங்கராஜ், பள்ளி மாணவ, மாணவியரிடம் பள்ளியின் செயல்பாடு குறித்து பேச்சுக் கொடுத்தார். அப்போது, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் அதிகாரியிடம், “தலைமை ஆசிரியர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை. பாடம் சொல்லித்தருவதில்லை’ என தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அதிகாரி ரங்கராஜ், தலைமை ஆசிரியரிடம் விசாரித்துள்ளார்.

கூடுதல் உதவி துவக்க கல்வி அலுவலர் ரங்கராஜ் சென்ற பின், மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் புகார் கூறிய மாணவர்கள் பற்றி விசாரித்துள்ளார். அடுத்த நாள் வந்தவுடன், குறிப்பிட்ட சில மாணவர்களை அழைத்து பேசினார். இதில், கல்வி அதிகாரியிடம் புகார் கூறிய மாணவர்களை பிரம்பால் அடித் துள்ளார். மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் சிலரின் கை, கால்களில் பிரம்பால் அடித்த வீக்கம் இருந்தது.

“தலைமை ஆசிரியர் அடித்து விட்டார்’ என மாணவர்கள் பெற்றோரிடம் கூறினர். இதுகுறித்து ஊராட்சி துணை தலைவர் ஆனந்த குமார் உதவி கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகார் செய்தார். நேற்று உதவி துவக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன், கூடுதல் உதவி துவக்க கல்வி அலுவலர் ரங்கராஜ் ஆகியோர் பள்ளிக்கு சென்றனர். மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரித்தனர்.

பெற்றோர்கள் கூறுகையில், “தலைமை ஆசிரியர் சரியாக பள்ளிக்கு செல்வதில்லை. அவரைப்பற்றி புகார் செய்த மாணவ, மாணவியரை சரமாரியாக அடித்துள்ளார்’ என்றனர்.

பொதுமக்களிடமும் அதிகாரிகளிடமும் தலைமை ஆசிரியர் ஆனந்த கிருஷ்ணன் கூறுகையில், “”இதுபோல் இனி நடக்காது; தவறைத்திருத்திக் கொள்கிறேன்,” என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

 

 

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: