லஞ்சத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?

தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவரை, வணிக ரீதியான தொழிலில் பின்பற்ற வேண்டிய அரசின் விதிமுறைகளை அறியவும், உரிய அனுமதியைப் பெறுவதற்காகவும் சந்திக்க வேண்டியிருந்தது. சந்திப்பின்போது அவர், தனக்குக் கீழ் உள்ள அலுவலரை அறிமுகம் செய்துவைத்தார். அந்த அலுவலர் தேவையான ஆவணங்கள் மற்றும் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் ஆகியவற்றைத் தெரிவித்தார்.  சரி.., எங்களுக்கு நன்கு அறிமுகமானவர் நீங்கள்.

உங்களுக்குச் செய்யாமல் யாருக்குச்  செய்யப்போகிறேன் என்ற பீடிகையுடன், அலுவலர் அறைக்குச் செல்லுமாறு கூறினார். அலுவலர் அறைக்குச் சென்றதும், தேவையான ஆவணங்களில் கையெழுத்து பெறப்பட்டது. அடுத்து கொஞ்சம் தயக்கத்துடன் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் தவிர கூடுதலாகக் குறிப்பிட்ட தொகையைக் கேட்டார் அந்த அலுவலர்.  நன்கு அறிமுகமானவர்களிடத்தில், இத்தகைய எதிர்பார்ப்பை எதிர்நோக்காததால்,  சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. அதை முகம்காட்டிக் கொடுத்துவிட்டதால், அந்த அலுவலர் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

நம்ம அதிகாரி ரொம்ப நல்லவர். அவருக்கு மேல் உள்ள அதிகாரி அடிக்கடி ஆய்வுக்கு வரும்போது, “கவனிக்க’ வேண்டியுள்ளது. அதற்கு உங்களைப் போன்றவர்களிடம் இருந்துதான் வாங்க வேண்டியுள்ளது என்று தன்னையும் தூய்மையாளராகக் காட்டிக் கொண்டார் அந்த அலுவலர். இதுபோன்ற அனுபவங்களை அன்றாட வாழ்வில் இன்றைக்குப் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் பலரும் சந்திப்பது வாடிக்கை. 

“லஞ்சம் வாங்குவதும் குற்றம்; லஞ்சம் கொடுப்பதும் குற்றம்’ என்று நாம் வாய் கிழியப் பேசினாலும், குறிப்பிட்ட பணியின் அவசர, அவசியம் கருதி, லஞ்சம் கொடுக்கும் இக்கட்டான நிலை சாதாரண குடிமகன் முதல் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர் வரை இருப்பது நிதர்சனமான உண்மை. 1950-க்கு முன் முறையற்ற வகையில் பொருள் ஈட்டுதல் பாவமாகக் கருதப்பட்ட காலம் உண்டு. இதற்கு கடவுள் நம்பிக்கையும், குருகுலக் கல்வியில் ஒழுக்கநெறிகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமுமே காரணமாக இருந்தன.

இதனால் அரசுப் பணியில் நேர்மையும், கடமையும் இன்றியமையாத குணங்களாககொண்டோர் எண்ணிக்கை அன்றைய காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.  இன்றைக்கு தனிமனிதன் பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சி பெற வேண்டுமெனில் உழைப்பு மட்டும் போதாது. போட்டிகளைச் சமாளிக்கும் திறனும், மற்றவரை வெற்றி கொள்ளும் சூட்சுமமும் அறிந்தவராக இருத்தல் வேண்டும்.

அந்தவகையில் லஞ்சம் கொடுத்தாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டிய முடிவை முன்னேறத் துடிப்பவர்கள் எடுப்பதும், அதைச் சரியான முறையில் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முற்படும் மனப்போக்கு இன்றைய அதிகாரிகள், அலுவலர்கள், அரசியல்வாதிகளிடத்திலும் அதிகரித்துள்ளது.  அதனால்தான் இன்றைக்குக் கிராம உதவியாளர் முதல் காமன்வெல்த் கான்டிராக்ட் வரை ஊழல் பெருகியுள்ளது.

இன்றைய கடுமையான சட்டங்களும், அதைப் பின்பற்றுவதற்காக வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளும் நேர்மையாக இருக்க நினைப்பவர்களையும், ஒன்றும் அறியாத அப்பாவிப் பொதுமக்களையுமே பாதிக்கின்றன. ஜாதிச் சான்றுக்கு மனு கொடுப்பது முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்கள் புதுப்பிப்பு வரை சாதாரண குடிமகன் அறிந்துகொள்ள முடியாத நடைமுறைகளும் இடைத்தரகர்களை உருவாக்கி லஞ்சத்தை வேலிபோட்டு காத்து வருகின்றன.  அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை எட்டிப் பிடித்துள்ள இந்த லஞ்சத்தையும், ஊழலையும் ஒரேநாளில் ஒழித்துவிட முடியாதுதான்.

ஆனால், அதைக்  கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஏராளமாக இருப்பதை மறுக்க முடியாது.  இன்றைய பள்ளிக் கல்வியில் புரட்சி ஏற்பட வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர்கள் உருவெடுக்க வேண்டும். நேர்மையின் முக்கியத்துவத்தை, அடிப்படைக் கல்வியில் நீதிபோதனைகள் மூலமும், உயர்நிலை, மேல்நிலைக் கல்வியில் லஞ்சம், ஊழலால் தனிநபர், குடும்பம் மற்றும் சமுதாயம் சந்திக்கும் பாதிப்புகளை, நடைமுறை வாழ்வில் அன்றாடம் வெளிவரும் செய்திகளை ஆதாரமாகக் காட்டி மாணவர்களிடத்திலே கொண்டு சேர்க்க வேண்டும்.

எவ்வித எதிர்பார்ப்புகளையோ, பலன்களையோ எதிர்நோக்காத நல்லோர் குழுக்கள் கிராம, வட்ட அளவில் நல்ல தலைமையின் கீழ் உருவெடுக்க வேண்டும். அக்குழுக்கள், அந்தந்தப் பகுதிகளில் நேர்மையான அலுவலர்களை, அரசியல்வாதிகளை (இன்றும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்!) ஆண்டுதோறும் கண்டறிந்து பிறர் அறியப் பாராட்ட வேண்டும். 

கல்வியில் புதிய புரட்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும். நீதி போதனைகளை பிஞ்சு உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிய வைக்க வேண்டும். அப்போதுதான் இனி வரும் காலங்களில் லஞ்சம், கொலை, கொள்ளை, களவுகள் குறைய வாய்ப்புகள் உண்டு. இல்லையென்றால் தர்மம், நீதி என்றால் என்ன விலை என்று கேட்க்கும் நிலையே உருவாகும்.

மேலும் இதுபோன்ற சிந்தனைக்கு விருந்தாகவும் , சுவையான ,சூடான கட்டுரைகளுக்கு ARTICLES LINKS tab – யை Click செய்யவும் …..

(di)

Advertisements

2 thoughts on “லஞ்சத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?”

 1. நல்ல கருத்து.
  லஞ்சம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் கொடுப்பதற்கு சில காரணங்கள்:
  ஒன்று: அவசரம் அவசியம். ;
  இரண்டு: சிரமப்படாமல் காரியம் சாதித்துக்கொள்ள வேண்டும் என்று சராசரி மனிதன் நினைப்பது; மூன்று: எளிதில் வெளி மனிதன் புரிந்து கொள்ள முடியாமலும், மேலும் அதற்கு செலுத்தவேண்டிய படிவங்கள் சரிவர விநியோகம் ஆகாமலும் பார்த்துக்கொள்ளும் அரசு ஊழியர்.

  புது வாகனம் பதிவு செய்து கொள்ள போக்குவரத்து துறை அலுவலகம் சென்றால் அங்கு தேவையான படிவங்கள் இரா; விசாரணை கவுண்டர் என்று ஏதாவது இருக்குமா? புரோக்கர்கள் தான் எங்கும் நிறைந்து இருப்பர்.

  பள்ளியில் லஞ்சம் கொடுக்கக் கூடாது, வாங்கக் கூடாது என கற்பிப்பது முக்கியம் தான்.

  கூடவே, அரசு அலுவலங்களில், சராசரி நபர் செய்துகொள்ள வேண்டிய நடைமுறைகளை மாதிரி படிவத்துடன் செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்களுடன் கற்பிப்பது அவசியம்.

  உதாரணம்: ராசன் கார்டு செய்து கொள்வது எப்படி? ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி? . முதலியன சொல்லிக் கொடுப்பது அவசியம்.

  ஒரு சின்ன யோசனை: சராசரி மனிதனுக்கு வேண்டிய விவரங்களை ஒய்வு பெற்ற அரசு ஊழியரில் எவரேனும் கைப்ரதி வெளியிட்டால் உதவியாக இருக்கும். லஞ்ச ஒழிப்பு குழுக்கள் இதற்கு பண உதவி செய்ய வேண்டும்.

  1. தங்கள் வருகைக்கும் , மறுமொழிக்கும் எனது நன்றிகள் ….

   உங்ககளது கருத்தும் வரவேற்க வேண்டிய ஒன்று .

   என்னுடைய இந்த பதிவில் லஞ்சத்தை ஒழிக்க செய்ய வேண்டிய பல செயல்களில் ஒன்றை மட்டும் கூறியுள்ளேன் .

   இன்னும் நிறைய மாற்றங்கள் , நிறைய துறைகளில் செய்தால் மட்டுமே ஓரளவேனும் லஞ்சத்தை ஒழிக்க முடியும் ….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s