site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

கறைபடி‌ந்த காவ‌ல்துறை!

Posted by sambala87(சூரியன்) மேல் மே 9, 2012

விசாரணை‌க்கு அழை‌த்து‌ செ‌ல்ல‌ப்ப‌ட்ட பெ‌ண்களை காவ‌‌ல‌ர்களே பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்த கொடுமை விழுப்புரம் மாவட்டத்தில் ‌நிக‌ழ்‌ந்து‌ள்ளது. கத‌றி அழுத 3 மாத‌ம் ‌‌நிறைமாத க‌ர்‌ப்‌பி‌ணியை க‌ற்ப‌ழி‌த்த த‌மிழக காவ‌ல்துறை கறைபடி‌ந்ததா‌‌கி‌ ‌வி‌ட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள மண்டபம் கிராமத்தில் வா‌ழ்‌ந்து வரு‌ம் இருளர் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமி, கார்த்திகா, ராதிகா மாதேஸ்வரி ‌திரு‌ட்டு வழ‌க்‌கி‌ல் ‌விசாரணை எ‌ன்ற பெய‌ரி‌ல் இர‌வி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் அழை‌‌‌த்து செ‌‌ன்று‌‌ள்ளன‌ர். காவ‌ல் ‌நிலைய‌த்து‌க்கு கொ‌ண்டு செ‌ல்லா‌ம‌ல் அ‌ங்கு‌ள்ள தைல மர‌க்கா‌ட்டி‌ல் நா‌ன்கு பெ‌ண்களையு‌ம் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தன‌ர் காவ‌ல்துறை‌யின‌ர்.

காவல்துறையினரிடம் வ‌ள்‌ளி எ‌ன்ற பெண்ம‌ணி அவ‌ர்களை விட்டுவிடுமாறு மன்றாடியபோதும், கண் முன்னாலேயே அவரது மகளையும் மருமகளையும் காவல் துறையினர் பாலியல் பலா‌த்கார‌ம் செ‌ய்து‌ள்ளன‌ர். லட்சுமி என்ற மூன்று மாத கர்ப்பிணியை காவ‌ல்துறை‌யின‌ர் பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்தது கொடுமை நெஞ்சை உறைய வைக்கிறது. காலில் விழுந்து மன்றாடியபோதும், மிருகங்கள் கூடச் செய்யத் துணியாத கொடுமையை காவல்துறையினர் செய்து உள்ளனர்.

பரமக்குடியில் 7 தலித் இளைஞர்களை அக்கிரமமாகச் சுட்டுக்கொன்ற காவல்துறையின‌ர் அ‌ப்போது த‌மிழக அரசு நடவடி‌க்கை எடு‌த்‌திரு‌ந்தா‌ல் இ‌ப்படி‌‌ப்ப‌ட்ட கா‌ரிய‌த்தை செ‌ய்ய‌த் காவ‌ல‌ர்களு‌க்கு து‌ணிவு வ‌ந்‌திரு‌க்குமா? எ‌ன்பது பலரது கே‌ள்‌வியாக உ‌ள்ளது.

தவறு செ‌ய்த காவ‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்காததா‌ல்த‌ா‌ன், எந்த அக்கிரமத்தையும் நடத்தலாம் என்கின்ற திமிரோடு இந்தக் கொடுமையை மண்டபம் கிராமத்தில் காவ‌‌ல்துறை‌யின‌ர் நடத்தி உள்ளனர்.

19 ஆண்டுகளுக்கு முன்பு 1991 ஆ‌‌ம் ஆ‌ண்டு தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் பழங்குடிப் பெண்களை அன்று அ.தி.மு.க. ஆட்சியின்போது காவல்துறையினரும், வனத்துறையினரும் பலாத்காரம் செய்தனர். அந்தக் கொடியவர்களுக்கு, 18 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதிமன்றம் ‌த‌ற்போதுதா‌ன் தண்டனை விதித்து உள்ளது.

அதற்குப் பிறகு இப்பொழுது மீண்டும், அதே போன்ற ஒரு கொடூரத்தை, ஈவு இரக்கம் இன்றித் தமிழகக் காவல்துறையினர் நடத்தி உள்ளனர். இது தமிழ்நாட்டின் காவல்துறைக்கு ஏற்பட்டு உள்ள அகற்ற முடியாத கறையும் களங்கமும் ஆகும். இந்த காட்டுமிராண்டிச் செயலில் ஈடுப‌ட்ட திருக்கோவிலூர் காவ‌ல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன், ஏட்டு தனசேகர், போலீஸ்காரர்கள் கார்த்திகேயன், பக்தவத்சலம் ஆகிய 5 பே‌ர் ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌ம் செய்யப்பட்டுள்ளது ‌தீ‌ர்வாகாது.

ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட காவல‌ர்களை ப‌ணி‌யி‌ல் இரு‌ந்து டி‌ஸ்‌மி‌ஸ் செ‌ய்வதோடு அவ‌ர்க‌‌ள் ‌மீது த‌மிழக அரசு, வரு‌ம் கால‌த்த‌ி‌ல் இதுபோ‌ன்ற ஒரு தவறை காவல‌ர்க‌ள் செ‌ய்ய‌க்கூடாது அளவு‌க்கு த‌ண்டனை இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதே பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌‌ன் எ‌‌தி‌ர்பா‌ர்‌‌ப்பாக இரு‌க்‌கிறது.

காவ‌ல்துறை எனது ந‌ண்ப‌ன் எ‌ன்று முதலமை‌ச்‌‌ச‌ர் ஜெயல‌லிதா கூறுவதை ‌வி‌ட்டு‌வி‌ட்டு, கரைபடி‌ந்த காவ‌ல்துறை‌யி‌ன் கள‌ங்க‌த்தை துடை‌க்க அவ‌ர் மு‌ன்வர வே‌ண்டு‌ம் எ‌ன்பதே பலரது கோ‌ரி‌க்கையாக இரு‌க்‌கிறது.

(wd)

.... இங்கே பதியப்பட்டது Article | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

பெண்கள் ஜீன்ஸ், டிஷர்ட் அணிய தடை!!!

Posted by sambala87(சூரியன்) மேல் மே 9, 2012

பணிபுரியும் இடங்களில் ஜீன்ஸ், டிஷர்ட் அணிய பெண்களுக்கு அனுமதி இல்லை என ஹரியானா பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த புதிய புடைவைகள் மற்றும் சல்வார் கமீஸ் மட்டுமே அணிய முடியும். ஜீன்ஸ் டிஷர்ட்டு போன்ற ஆடைகளால் மற்றவர்களின் கவனம் சிதறக் கூடும்.

எனவே ஜீன்ஸ் டிஷர்ட்டு போன்ற உடைகள் அநாகரீக ஆடைகள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை எச்சரித்துள்ளது.

(wd)

.... இங்கே பதியப்பட்டது Hot News | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

பால்மேனன் மீட்கப்பட்ட 8 மணி நேரத்தில் நடந்தது என்ன?

Posted by sambala87(சூரியன்) மேல் மே 5, 2012

சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் விடுவிக்கப்பட்ட அன்று நடந்த தொடர் சம்பவங்கள், அவரது விடுவிப்பில் நிகழ்ந்த தாமதம், குழப்பம் குறித்து, பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பால்மேனன் விடுவிக்கப்பட்ட தினமான நேற்று முன்தினம், மாவோயிஸ்ட் தரப்பு பிரதிநிதிகளான பி.டி.சர்மா மற்றும் பேரசிரியர் ஹர்கோபால் ஆகியோர், சிந்தல்நார் சி.ஆர். பி.எப்., முகாமிற்கு காலை 8.30க்கு வருவதாக இருந்தது. ஆனால், வரவில்லை.
அங்கு கூடியிருந்த ஆந்திர, ஒரிசா, இந்தி, உள்ளூர் மற்றும் ஆங்கில “டிவி’ சேனல்கள் என, தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும், மாவோயிஸ்ட் பிரதிநிதிகள் காலை எட்டு மணிக்கே ஹெலிகாப்டரில் புறப்பட்டு விட்டதாக செய்திகளை வெளியிட்டன.
முண்டியடித்தன

ஆனால், இருவரும் 11 மணிக்குத்தான் சி.ஆர். பி.எப்., முகாமிற்கு ஹெலிகாப்டரில் வந்தனர். பின்னர் அங்கிருந்து, தத்மெட்லாவிற்கு சென்றனர்.பால்மேனன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, டாக்டர்கள் விபுன் தாக்கூர் மற்றும் பி.சர்மா ஆகியோர் ஆம்புலன்சில் சென்றனர். இவர்களுடன் உதவி கலெக்டர் மற்றும் துணை கலெக்டரும் வேறு வாகனத்தில் சென்றனர்.அப்போது, சிந்தல்நாரில் செய்திக்காக காத்திருந்த அனைத்து ஊடகங்களும், இவர்களுடன் தத்மெட்லா செல்ல முடிவு செய்து, அவர்களின் கார்களைப் பின் தொடர்ந்தன. சிந்தல்நாரில் இருந்து தத்மெட்லா செல்லும் 6 கி.மீ., தொலைவுள்ள சாலை மிக மோசமாக உள்ளது. எட்டு அடிக்கும் குறைவான அகலம் கொண்ட அந்த சாலையில், ஒரே நேரத்தில் பல கார்கள் முண்டியடித்துச் சென்றன.

சிக்கிய வாகனங்கள்:ஒரு கட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, தத்மெட்லாவில் இருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு முன்னதாக, பி.டி. சர்மா மற்றும் ஹர்கோபால் சென்ற வாகனம், அடர்ந்த காட்டில் தவறான பாதையில் சென்று விட்டது. அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற வாகனங்களும், அதே திசையில் சென்று சிக்கின. பாதையே இல்லாத ஒரு இடத்தில் போய் வாகனங்கள் நின்று விட்டன.அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் வந்து கொண்டு இருந்ததால், உடனடியாக வாகனங்கள் திருப்பப் பட்டு, வேறு திசையில் சென்றன. அந்த ரணகளத்திலும், சர்மா மற்றும் ஹர்கோபாலிடம் கேமராக்களை நீட்டுவது, அவரைப் படம் பிடிப்பது என, “டிவி’ சேனல்களைச் சேர்ந்தவர்கள் அட்டகாசம் செய்தனர்.

ஒருவழியாக, 11.40 மணிக்கு தத்மெட்லா சென்றவுடன், “பத்திரிகையாளர்கள் எவரும், கேமராக்களில் யாரையும் படம் பிடிக்கக் கூடாது’ என, மாவோயிஸ்டுகள் உத்தரவிட்டுள்ளதாக, உள்ளூர் பத்திரிக்கை நிருபர்கள் கூறினர். யாரும் கிராமத்திற்குள் செல்லாத வகையில், அனைத்து ஊடகத்தினரும் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பெயர் விவரம் சேகரிப்பு :சர்மா மற்றும் ஹர்கோபால் மட்டும் கிராமத்திற்குள் சென்றனர். தொடர்ந்து பி.பி.சி., பத்திரிகையாளர் சல்மான் ரவியை மட்டும் மாவோயிஸ்டுகள் அழைத்துச் சென்றனர். இதையடுத்து, வந்திருந்த அனைத்து பத்திரிகையாளர்களின் பெயர், தொலைபேசி எண், சார்ந்துள்ள ஊடகம் ஆகிய விவரங்களை மாவோயிஸ்டுகள் சேகரித்தனர்.மேலும், பால்மேனன் ஆரோக்கியமாக இருப்பதால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் உடனே தத்மெட்லாவில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என, மாவோயிஸ்டுகள் உத்தரவிட்டனர். அடுத்த ஐந்து நிமிடத்தில் தத்மெட்லா காலியானது. அலெக்ஸ் பால்மேனன், மாவோயிஸ்ட்கள் பிடியிலிருந்து வெளிவரும் காட்சியை படம் பிடிக்க ஓடோடி வந்த பத்திரிகையாளர்கள், பெரும் ஏமாற்றத்துடன் சிந்தல்நார் திரும்பினர்.

இதன்பின், நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் அலெக்ஸ் பால்மேனன், பி.டி.சர்மா மற்றும் ஹர்கோபால் ஆகியோர், சிந்தல்நார் சி.ஆர். பி.எப்., முகாமிற்கு வந்தனர். மிகவும் களைப்புடன் இருந்த பால்மேனன் செய்தியாளர்களிடம், “தூது குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தற்போதைய நிலையில் எந்த கேள்விக்கும் பதில் அளிக்கும் நிலையில் நான் இல்லை. இன்று இரவு இங்கு தங்கிவிட்டு, நாளை காலை தான் சுக்மா செல்வேன். நாளை நிச்சயம் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்’ என்றார்.

பத்திரிகையாளர் மீது கோபம்?மாவோயிஸ்ட் தூதர்களுடன் சென்ற சல்மான் ரவி திரும்பி வந்த போது கூறியதாவது:சில தினங்களுக்கு முன்னர், பத்திரிகையாளர்களுக்கு தாங்கள் விடுத்த எச்சரிக்கைக்காக மாவோயிஸ்டுகள் மன்னிப்பு கோரியுள்ளனர்.
இங்குள்ள சில பத்திரிகையாளர்கள், போலீசால் அனுப்பபட்டவர்களாக இருப்பார்களோ என, அவர்கள் சந்தேகப்படுகின்றனர். மேலும், சில தினங்களுக்கு முன், இங்கு வந்த சில பத்திரிகையாளர்கள், உள்ளூர் பெண்களை கேலி செய்ததாகப் புகார் கிளம்பியது.
அதனால், பத்திரிக்கையாளர்கள் ஒருவர் கூட தத்மெட்லாவில் இருப்பதை மாவோயிஸ்டுகள் விரும்பவில்லை. அதனால் தான், அனைவரையும் வெளியேற்றி விட்டனர் என்றார்.

(dm)

.... இங்கே பதியப்பட்டது Hot News | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

நல்ல சட்டம்: சரியான முறையில் செயல்படுமா?

Posted by sambala87(சூரியன்) மேல் மே 5, 2012

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்டது. இந்தத் தீர்ப்பு இன்று முதலாகவே நடைமுறைக்கு வரும் என்றும் நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசு சில மாதங்களுக்கு முன்பே இத்திட்டத்தை ஏற்று அறிவித்திருப்பதோடு, எப்படிச் செயலாற்ற வேண்டும் என்கிற விதிமுறைகளையும் ஏற்படுத்திவிட்டது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது பள்ளிக் கல்வித் துறை.

ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் ஏழை மாணவர்கள் தகுதியைப் பெறுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், அரசு ஊழியர்களில் 90 விழுக்காட்டினர் பதவிகள் மூலம் நெருக்கடி தந்து இந்த 25% விழுக்காட்டினைப் பெற்றுப் பயனடைதல் சாத்தியமில்லை.

இருப்பினும், ஒரு பள்ளியில் 25%க்கும் அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்தால் “ரேண்டம்’ முறையில் தீர்மானிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த “ரேண்டம்’ முறைத் தேர்வு எப்படி நடத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த “ரேண்டம்’ முறை பள்ளி வளாகத்தில் பொது இடத்தில் வைத்து, விண்ணப்பித்த அனைத்துப் பெற்றோரின் முன்னிலையில் நடத்தப்பட்டால் மட்டுமே, இதில் ஊழல் இல்லாத நிலையை உருவாக்க முடியும். இல்லாவிட்டால், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், கல்வி அதிகாரிகள் தலையீட்டால் மாணவர் சேர்க்கையில் குளறுபடி நடக்கும்.

25% இடங்கள் ஏழை மாணவர்களுக்கு அளிக்கப்பட்டால் தங்கள் லாபம் குறைந்துவிடும் என்று முணுமுணுக்கும் தனியார் பள்ளிகள் ஒருபுறம் இருக்க, அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை மேலும் குறைந்துவிடும் என்று அரசுப் பள்ளி ஆசிரியர் அமைப்புகளும்கூட எதிர்ப்புத் தெரிவித்தன. அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் பணி தரமாக நடைபெற்றால் நிச்சயமாக மாணவர்கள் வரவே செய்வார்கள் என்பதை ஆசிரியர் சங்கங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழக அரசு அறிவிக்கை வெளியான போதிலும்கூட, இன்னும் சில நடைமுறைகளை அரசு விரிவாகச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்தச் சட்டம் 6 வயது முதல் 14 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே. அதாவது, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதைக் காரணமாகக் காட்டி பிளஸ் 2 படிப்பில் கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தை நாடும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இந்த 25% ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்பதை ஆணித்தரமாக அறிவித்து, இதுதொடர்பாகத் தடையுத்தரவு கோரும் மனுக்களை விசாரிக்கும் முன்பாக, தமிழக அரசிடம் கருத்தறிய வேண்டும் என்றும் “கேவியட்’ தொடுத்து வைப்பது அவசியம்.

ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணம் மட்டும் நிர்வாகத்துக்குத் தரப்படவுள்ளது. இந்த இடஒதுக்கீட்டில் படிக்க வரும் மாணவர்களிடம் கற்பித்தல் மற்றும் வகுப்பறைச் சூழலில் எந்தவித பாகுபாடும் காட்டப்படக்கூடாது என்பதை இந்த அறிவிக்கை மிகத் தெளிவாக உணர்த்துகிறது. அதேபோல, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இலவசமாகத்தான் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களுக்கு வெவ்வேறு விதமான ஷூக்கள், டை, வண்ண உடைகள், உடற்பயிற்சி வகுப்பு நாளில் வெள்ளை உடை மற்றும் கேன்வாஸ் ஷு என்று பல வகை உடைகளை நிர்ணயித்து லாபம் பார்த்து வருகின்றன. அங்கே சேரும் இந்த ஏழை மாணவர்கள் இந்தச் செலவுகளை எப்படி ஏற்க முடியும்? அதனால், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, நிதியுதவி பெறும் பள்ளி என அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரேவிதமான சீருடையை மாணவ – மாணவியருக்கு அறிவுறுத்துவதும் அவசியம்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் மற்றொரு வருவாய், பள்ளி வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வரும் பேருந்துக் கட்டணத்தால் கிடைக்கிறது. ஏழைக் குழந்தைகளால் பேருந்துக் கட்டணத்தைச் செலுத்த முடியாது. தற்போதுள்ள நடைமுறைப்படி தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ் கிடைப்பதில்லை. 25% இடஒதுக்கீடு வரும் கல்வியாண்டு முதலாகவே அமலுக்கு வரும் என்ற நிலையில், இத்தகைய இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் எந்தத் தனியார் பள்ளியில் படித்தாலும் அவர்களுக்கு அரசின் இலவச பஸ் பாஸ் வழங்குவதை இப்போதே உறுதி செய்யவும் வேண்டும்.

தனியார் பள்ளியில் படிக்கும் உயர் வருவாய்ப் பிரிவினரின் குழந்தைகளுக்கு இணையாக இந்த ஏழைக் குழந்தைகளும் படிப்பில், தேர்வில் சிறந்து விளங்குவார்கள் என்று சொல்லிவிட முடியாது. அதற்காகத்தான் இந்தச் சட்டத்தில், இத்தகைய குழந்தைகளை மற்ற குழந்தைகளுக்கு இணையான அறிவுத்திறன் பெறும் வகையில் சிறப்புப் பயிற்சி அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழந்தைகளுக்குச் சிறப்புப் பயிற்சி இல்லாவிட்டால், ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடும். ஆகவே, சிறப்புப் பயிற்சியை ஏழை மாணவர்களுக்கு உறுதி செய்வது மிகமிக அவசியம்.

பல தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, தீர்ப்பு வருவதற்கு முன்பே அவசர அவசரமாக முடிக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. 2012-13 நிதியாண்டில் 25% மாணவர் ஒதுக்கீடு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தும்கூட இந்த மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டிருப்பது, அரசுக்கு நெருக்கடி தந்து, இந்த 25%க்குக் கூடுதல் இடங்களை அனுமதிக்க வேண்டிக்கொள்ளலாம் என்ற (கல்வி அதிகாரிகள் கொடுத்த) தைரியம்தான், வேறென்ன!

நல்லதொரு சட்டம் இயற்றப்பட்டு, உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்து விட்டிருக்கிறது. இதை நடைமுறைச் சாத்தியமாக்கும் பொறுப்பு அரசிடம்தான் இருக்கிறது. சட்டம் செயலாக்கப்பட்டாலே போதும், கல்வி குடிசைகளைப் போய்ச் சேரத் தொடங்கிவிடும்!

(di)

.... இங்கே பதியப்பட்டது Article | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

சட்டத்தில் ஓட்டை : இதுவே தீர்வாகாது!

Posted by sambala87(சூரியன்) மேல் மே 5, 2012

வெளிநாடுகளில் மேல்படிப்புக்காகச் செல்லும் டாக்டர்களில் இந்தியா திரும்புவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மேல்படிப்புக்கு வெளிநாடு சென்றவர்களில் 3,000 டாக்டர்கள் நாடு திரும்பவில்லை.

இந்நிலையில், 2012-ஆம் ஆண்டு முதலாக மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்கள் யாராக இருந்தாலும், படிப்பை முடித்தவுடன் இந்தியா திரும்புவேன் என்று உறுதிமொழிப் பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டுத்தான் செல்ல முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட உள்ளதாக அறிவித்திருக்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத்.

அமெரிக்கா மட்டும்தான், மேல்படிப்புக்காக வரும் டாக்டர்கள் அவர்தம் நாட்டிலிருந்து தடையில்லா சான்று கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆகவே, அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்லும் டாக்டர்களுக்கு மட்டும் இந்த நிபந்தனை விதிக்கப்படும். இந்த உறுதிமொழியை அவர்கள் மீறினால், இவர்கள் அமெரிக்காவில் மருத்துவத் தொழிலில் ஈடுபடக்கூடாது என்று இந்தியா வலியுறுத்த முடியும் என்று ஆசாத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மட்டும் இந்தியாவில் டாக்டர் பட்டம் பெற்ற 60,000 பேர் பணியாற்றுகிறார்கள்.

ஒருவர் தான் கற்ற கல்விக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வெளிநாட்டில் கிடைக்கும்போது அவர் இந்தியாவில்தான் பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? குறிப்பாக, டாக்டர்களை மட்டும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? லட்சக்கணக்கில் கணினிப் பொறியாளர்கள் வெளிநாடுகளில் படிக்கச் சென்று அங்கே வேலையில் சேர்ந்துவிடுவதில்லையா என்கிற கேள்விகள் கேட்கப்படலாம்.

இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லாமல், அபரிமிதமான எண்ணிக்கையில் இருப்பார்களேயானால், அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் கவலையில்லை என்று சும்மா இருக்கலாம். ஆனால், டாக்டர்கள் விவகாரத்தில் நிலைமை அதுவல்ல.

இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு டாக்டர்தான் இருக்கிறார். இதுவே அமெரிக்காவில் 350 பேருக்கு ஒரு டாக்டர், இங்கிலாந்தில் 469 பேருக்கு ஒரு டாக்டர், ஜப்பானில் 606 பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலைமை உள்ளது. இந்திய மக்கள்தொகைக்கு ஏற்ப கணக்கிட்டால் 6 லட்சம் டாக்டர்கள் பற்றாக்குறை. செவிலியர்களில் 10 லட்சம் பேரும், பல் மருத்துவர்களில் 2 லட்சம் பேரும் பற்றாக்குறை. இந்நிலையில், இந்தியாவில் இளநிலை படிப்பை முடித்துவிட்டு, முதுநிலை படிப்பு அல்லது சிறப்பு மருத்துவம் பயிலுவதற்காக வெளிநாடு செல்வோரும் திரும்பி வரவில்லை என்றால் இந்தியாவின் நிலைமைதான் என்ன?

மேலும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் ஒரு மருத்துவரை உருவாக்கச் செலவிடும் தொகை மிக அதிகம். எம்பிபிஎஸ் படிப்பை ஐந்தரை ஆண்டுகளில் ஒரு மாணவர் படித்து முடிக்கிறார் என்றால், மருத்துவக் கல்வி அளிக்கும் நிறுவனம், கல்விப்புலம், நூலகம், ஆய்வகம் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, அதைப் பராமரிக்கும் செலவுகளைக் கணக்கிடும்போது, ஒரு மருத்துவ மாணவருக்கு அரசு ஆண்டுதோறும் ரூ.30 லட்சம் வரை செலவிடுகின்றது. இத்தனை செலவுகளை இந்திய அரசு ஏற்பதால், அவர்கள் இந்தியாவில்தான் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்துவது நியாயம்தானே!

இந்தியா திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையை இந்தியா அறிமுகம் செய்யப்போகிறது என்று மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் அறிவித்திருந்தாலும், நல்வாழ்வு மற்றும் மனிதவளத்துக்கான தேசிய ஆணையத்தின் வரைவு மசோதாவில் இது தொடர்பான புதிய நிபந்தனைகள் வலுவாக இல்லை என்பதையும் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த மசோதாவில் பிரிவு 59-இல் “இந்தியாவுக்குச் சேவை செய்யும் கடமை’ இடம்பெறுகிறது. இதில் இந்திய அரசின் உதவி பெறும் நிறுவனம் அல்லது அரசுக் கல்லூரியில் இளநிலை டாக்டர் பட்டம் பெற்று, மேல்படிப்புக்காக வெளிநாடு சென்றவர், இந்தியா திரும்பிவந்து 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர் இந்தியாவில் தேசிய அல்லது மாநில அளவிலான மருத்துவர் பெயர் பதிவேட்டிலிருந்து அவரது பெயர் நீக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இந்தப் பிரிவின் மூன்றாவது உட்பிரிவில், மத்திய-மாநில அரசுகளின் நிதியுதவி பெறாத கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் படித்த டாக்டர்கள், மேல்படிப்பு அல்லது சிறப்பு மருத்துவப் படிப்புக்காக வெளிநாடு சென்று, மூன்று ஆண்டுகளில் இந்தியா திரும்பாவிட்டால், தங்கள் வாழிடம் குறித்து தகவல் தெரிவிக்காவிட்டால், தொழில் நடத்தைபிறழ்வாகக் கொள்ளப்படும் என்கிறது. அதாவது அரசுக் கல்லூரியில் படித்த டாக்டர்களுக்கும் தனியார் கல்லூரியில் படித்த டாக்டர்களுக்கும் சிறிய வேறுபாட்டை இந்த மசோதா உருவாக்குகிறது. இது நியாயமல்ல.

மேலும் இதே பிரிவு 59-ல் உட்பிரிவு 2-இல், மருத்துவர் பெயர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்ட ஒரு டாக்டர் தனது பெயரை மீண்டும் இந்தியாவில் பதிவு செய்துகொள்ள, கமிஷன் குறிப்பிடும் கட்டணம், அவர்கள் சொல்லும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் சொல்கிறது.

இந்த உறுதிமொழிப் பத்திரத்தின் மூலம் அமெரிக்காவில் மட்டுமே தொழில்செய்ய முடியாத நிலை ஏற்படும். ஆனால், அவர் அமெரிக்காவில் படித்துவிட்டு, கனடா அல்லது ஆஸ்திரேலியாவில் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றிச் சம்பாதித்துவிட்டு, ஓய்வாக தாய்நாடு திரும்ப விரும்பினால், மேற்சொன்ன விதிமுறைப்படி, கமிஷனின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் போதுமானது. இதுவும் சட்டத்தில் ஓட்டையைத்தான் ஏற்படுத்துகிறது.

எல்லா டாக்டர்களும், அவர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி என எங்கு படித்திருந்தாலும், இந்தியாவுக்குத் தேவை. எல்லாருக்கும் பொதுவான, உட்சலுகைகள் இல்லாத ஒரு விதியை உருவாக்கினால்தான் இந்தியாவில் மருத்துவர் எண்ணிக்கை உயரும்.

(di)

.... இங்கே பதியப்பட்டது Article | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 80 other followers